ஜெயிலர் 2 படத்தில் இப்படியொரு காட்சியா, U/A சான்றிதழ் கிடைக்குமா?


ஜெயிலர் 2

ஜெயிலர் 2 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம்.

இப்படம் உலகம் முழுவதும் கண்டிப்பாக ரூ 1000 கோடிகள் வரை வசூல் செய்யும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அதோடு தமிழ் சினிமாவிற்கு இதுவரை ரூ 1000 கோடி என்பது வந்ததே இல்லை, அதனால் கண்டிப்பாக இந்த படம் ரூ 1000 கோடி வசூல் வந்தே ஆகவேண்டும் என ரசிகர்களே காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் ஜெயிலர் 2 படம் சென்சார் முடிந்துவிட்டது, இந்த படத்திற்கு யு/ஏ வாங்க வேண்டும் என்று தான் படக்குழுவில் பலரும் முயற்சி செய்கின்றனர்.

ஆனால், படத்தில் வன்முறை காட்சி ஒன்று ஒருவர் தலையை வெட்டி மேஜையில் வைப்பது போல் ஒரு காட்சியாம், அதை கட் செய்தால் தான் யு/ஏ என்று சொன்னதாகவும், அதற்கு நெல்சன் மறுத்ததால் ஏ சான்றிதழ் தான் கொடுப்பார்கள் என்றும் அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

ஏற்கனவே ரஜினியின் கூலி ஏ சான்றிதழ் வாங்கியதால் வசூலில் கொஞ்சம் அடி வாங்க, இந்த படத்தில் கண்டிப்பாக யு/ஏ வாங்கிவிட வேண்டும் என் ரஜினி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *