மண்டாடி பிரம்மாண்ட வெற்றி! சூரியின் அடுத்த படத்தின் இமாலய சம்பளம்
சூரி
சூரி தமிழ் சினிமாவில் காமெடியனாக வந்து இன்று உச்சம் நோக்கி பயணிக்கிறார். இவர் நடிப்பில் வெளியான விடுதலை, மாமன், கருடன் என அனைத்து படங்களும் ஹிட் ஆக தற்போது வெளிவந்த மண்டாடி படமும் பிரம்மாண்ட வரவேற்பு பெற்றுள்ளது.
கண்டிப்பாக இந்த படம் ரூ. 100 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பளம்
இதை தொடர்ந்து சூரி அடுத்து சென்னை வெள்ளத்தை மையமாக வைத்து அயலான் இயக்குனர் ரவிகுமார் இயக்கப்போகும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை மைத்ரி நிறுவனம் தயாரிக்கவுள்ளது, இப்படத்தின் பட்ஜெட் ரூ. 50 கோடி இருக்க, சூரியின் சம்பளம் ரூ. 25 கோடி என கூறப்படுகிறது.
கண்டிப்பாக இது சூரியின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சூரி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராகிவிட்டார் என்றே கூறலாம்.
