19 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்
விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் 19 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஸ்வநாத் & சன்ஸ்
நடிகர் சூர்யாவை இப்படியொரு கதாபாத்திரத்தில் பார்த்த பல ஆண்டுகளுக்கு ஆகிவிட்டதே என ஏக்கத்துடன் காத்திருந்த ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்த திரைப்படம்தான் விஸ்வநாத் & சன்ஸ்.
காதல் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி வெளிவந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. இருப்பினும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது.
பாக்ஸ் ஆபிஸ்
விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் வசூல் குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், 19 நாட்களில் உலகளவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 19 நாட்களில் ரூ. 212 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் ரூ. 61 கோடி வசூலித்துள்ளது.
