7 நாட்களில் டாக்சிக் திரைப்படம் செய்துள்ள வசூல்.. முழு விவரம் இதோ

யஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான டாக்சிக் திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகர் யஷ்

கன்னட திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த நடிகர் யஷ், கே.ஜி.எப் திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். இதன்பின், வெளியான கே.ஜி.எப் 2 திரைப்படம் யஷை பான்-இந்தியன் ஸ்டாராக மாற்றியது. கன்னட திரையுலகில் இருந்து ரூ. 1000 கோடி வசூல் செய்த முதல் ஹீரோ என்கிற சாதனையையும் யஷ் படைத்தார்.

பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் டாக்சிக் திரைப்படம் செய்துள்ள வசூல்.. முழு விவரம் இதோ | Toxic Movie 7Days Worldwide Box Office Collection

டாக்சிக்

கே.ஜி.எப் 2 வெற்றியை தொடர்ந்து யஷ் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி கடந்த வாரம் வெளியான திரைப்படம் டாக்சிக். கே.வி.என் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, நயன்தாரா, தாரா சுதாரியா மற்றும் ஹுமா குரேஷி என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் டாக்சிக் திரைப்படம் செய்துள்ள வசூல்.. முழு விவரம் இதோ | Toxic Movie 7Days Worldwide Box Office Collection

இப்படத்தின் டீசர் வெளிவந்த நாளிலிருந்தே பல சர்ச்சைகள் எழுந்தன. டிரைலர் வெளியான பிறகு பெண்களை மிகவும் மோசமாக இப்படம் காட்டியுள்ளது என பலரும் இப்படத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். சர்ச்சைகளும் கண்டனங்களும் ஒரு பக்கம் இருந்தாலும், இப்படத்தை திரையரங்கில் காண வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் டாக்சிக் திரைப்படம் செய்துள்ள வசூல்.. முழு விவரம் இதோ | Toxic Movie 7Days Worldwide Box Office Collection

அப்படி எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் முழுமையாக பூர்த்தி செய்யாமல் ஏமாற்றியது டாக்சிக். கடந்த வாரம் வெளியான இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தன. இதனால் பாக்ஸ் ஆபிஸில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்

இந்நிலையில், டாக்சிக் திரைப்படம் 7 நாட்களை கடந்துவிட்டது. இதுவரை உலகளவில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 7 நாட்களில் உலகளவில் யஷின் டாக்சிக் திரைப்படம் ரூ. 300 கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாள் உலகளவில் ரூ. 150 கோடி வசூலித்த நிலையில், அடுத்த 6 நாட்களில் மொத்தமாக ரூ. 150 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் ஏற்பட்டுள்ள சரிவை தெளிவாக காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் ஆபிஸ்: 7 நாட்களில் டாக்சிக் திரைப்படம் செய்துள்ள வசூல்.. முழு விவரம் இதோ | Toxic Movie 7Days Worldwide Box Office Collection

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *