ஆதாரத்தை கண்டுபிடித்த மருது.. ஆவேசத்தில் அரசி.. பரபரப்பாகும் சாமந்தி…


சாமந்தி சீரியல்

Zee தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சாமந்தி சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமந்தி, ராஜா-ராணி போட்டோவை பார்த்து வருத்தத்தில் இருந்தார்.

இந்த நிலையில் இன்று என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

மறுபக்கம் மருதுவும் இசக்கியும் கெமிக்கல் ஃபேக்டரி தொடர்பாக விசாரித்து வருகிறார்கள். ஆனால் ஆரம்பத்தில் அவர்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை.

ஆதாரத்தை கண்டுபிடித்த மருது.. ஆவேசத்தில் அரசி.. பரபரப்பாகும் சாமந்தி... | Zee Tamizh Chamanthi Serial Latest Episode

இதனால் நேரடியாக அந்த ஃபேக்டரிக்கே சென்று விசாரிக்க முயற்சி செய்கிறார்கள். அங்கும் தகவல் கொடுக்க மறுக்கப்பட்ட நிலையில், அவர்களை மிரட்டி சிசிடிவி காட்சிகளை பார்த்த மருதுவுக்கு முக்கியமான ஆதாரம் சிக்குகிறது.


அந்த காட்சிகளில் காட்டு ராஜா தான் கெமிக்கல் வாங்கிச் சென்றது தெரிய வர, உடனே இந்த விஷயத்தை சாமந்தியிடம் தெரிவிக்கிறார்கள். இதைக் கேட்டு சந்தோஷப்படும் சாமந்தி, “புதுசா வந்திருக்கும் இன்ஸ்பெக்டர்கிட்ட இந்த ஆதாரத்தை கொடுத்தா எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடும்” என்று கூறுகிறார்.

ஆதாரத்தை கண்டுபிடித்த மருது.. ஆவேசத்தில் அரசி.. பரபரப்பாகும் சாமந்தி... | Zee Tamizh Chamanthi Serial Latest Episode


இதே நேரத்தில் உடல்நலக்குறைவால் பார்வதி சாப்பிடாமல் படுத்துக் கொண்டிருக்கிறார். சாமந்தி எவ்வளவு சொல்லியும் அவர் சாப்பிட மறுக்கிறார். அப்போது அங்கு வரும் அர்ஜூன், பார்வதியை உட்கார வைத்து அவருக்கு சாப்பாடு ஊட்ட முயற்சி செய்கிறான்.


இதையெல்லாம் பார்த்த அரசி, ஆவேசமாக “அர்ஜூன்!” என்று சத்தம் போடுகிறார்.

இதனால் வீட்டில் அடுத்ததாக என்ன பிரச்சனை வெடிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

**மருதுவின் கையில் சிக்கிய ஆதாரம் காட்டு ராஜாவை சிக்க வைக்குமா? அரசியின் கோபம் அர்ஜூனை என்ன செய்யும்? அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது என்பதை இன்றைய சாமந்தி எபிசோடில் காணலாம்.** 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *