ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்ததா லோகேஷ் கனகராஜின் டிசி திரைப்படம்… மாஸ் கலெக்ஷன் விவரம்
டிசி திரைப்படம்
ஆல் ஏரியாவிலும் நான் கில்லி என விஜய்யின் பட வசனம் வருவது போல் இயக்கம் மட்டுமில்லை நடிப்பிலும் மாஸ் காட்டுவேன் வசூல் வேட்டை செய்வேன் என செய்து காட்டி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படம் டிசி.
அனிருத் இசையமைக்க ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான டிசி படம் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
பாக்ஸ் ஆபிஸ்
ஹீரோவாக களமிறங்கியுள்ள லோகேஷ் கனகராஜின் நடிப்பு ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. அதேபோல் அனிருத்தின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
படம் வெளியாகி 15 நாள் முடிவில் உலகளவில் ரூ. 100 கோடிக்கு மேலான வசூல் வேட்டை செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
படங்கள் இயக்கி ரூ. 100 கோடி மட்டுமில்லை நடிப்பின் மூலமாகவும் வசூல் வேட்டை செய்வேன் என இப்படம் மூலம் மாஸ் காட்டியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
