5 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்..

5 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்..

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் 5 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வநாத் & சன்ஸ்

2026-ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவிற்கான ஆண்டாக மாறி வருகிறது. இவர் நடிப்பில் கடந்த மே 15-ஆம் தேதி வெளிவந்த கருப்பு மிகப்பெரிய வசூல் பெற்றது. சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையையும் படைத்தது.

Box office: 5 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. | Vishwanath And Sons 5 Days Worldwide Box Office

இந்த வெற்றியை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்துள்ளது விஸ்வநாத் & சன்ஸ். இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் இளம் சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ளார்.

வசூல்

கடந்த வாரம் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. மேலும், முதல் 3 நாட்களில் உலகளவில் அமோக வரவேற்பை பெற்று வசூலை வாரிக்குவித்து வந்தது. ஆனால், கடந்த 2 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் பின்னடைவை சந்தித்துள்ளது.

Box office: 5 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. | Vishwanath And Sons 5 Days Worldwide Box Office

இந்நிலையில், 5 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 5 நாட்களில் இப்படம் ரூ. 138 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜீது மாதவன் – சூர்யா

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து, மலையாள இயக்குநர் ஜீது மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இப்படமும் இந்த ஆண்டு வெளிவந்தால், கண்டிப்பாக இந்த ஆண்டு சூர்யாவின் ரசிகர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட்டாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Box office: 5 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. | Vishwanath And Sons 5 Days Worldwide Box Office

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *