27 வயதில் தூக்கத்திலேயே உயிரிழந்த பிரபல இளம் நடிகை…

அனன்யா ராஜ்
பிரபலங்களில் இறப்பு செய்தி எப்போதும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.
அப்படி பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை உயிரிழந்ததாக வந்த தகவல் ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹிந்தியில் 7 ஹவர்ஸ் டு ஹோ, தி பைனல் எக்சிட், கோஸ்ட் போன்ற படங்களில் நடித்தவர் தான் அனன்யா ராஜ்.
27 வயதான இவர் தெலுங்கில் தஹ்டிலி என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும் பல்வேறு குடும்படங்கள், இசை நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றியவர் வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.
சோக செய்தி
பிஸியாக நடித்து வந்தவர் ஒரு கட்டத்தில் சினிமா பக்கமே காணவில்லை, சரி கொஞ்சம் இடைவேளை எடுத்துள்ளார் என ரசிகர்கள் நினைத்தார்கள்.
இந்த நேரத்தில் தான் அனன்யா ராஜ் பற்றி ஒரு திடுக்கிடும் தகவல் வந்தது. அதாவது அனன்யா ராஜ் மரணமடைந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உடல்நலம், மனநலம் தொடர்பான பிரச்சினைகளை சந்தித்து வந்த அனன்யா ராஜ் கடந்த மாதம் 15ம் தேதி வீட்டில் உறக்கத்திலேயே மரணமடைந்துவிட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி ரசிகர்களுக்கு கடும் சோகத்தை கொடுத்துள்ளது.






