‘This is the first time I’ve done this in my career’ – Meenakshi Chowdhury|’எனது கெரியரில் இதை முதல்முறையாக செய்திருக்கிறேன்’

சென்னை,
தமிழில் விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படம் மூலம் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி. சமீபத்தில் வெளியான ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ மற்றும் விஜய்யின் ‘தி கோட்’ ஆகிய படங்களில் நடித்து பாராட்டை பெற்றார்.
குறுகிய காலத்திலேயே சினிமாவில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள இவர், ‘லக்கி பாஸ்கர்’ , மட்கா, உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். தற்போது இவர் வெங்கடேஷ் நடித்துள்ள ‘சங்கராந்திகி வஸ்துன்னம் ‘படத்தில் நடித்திருக்கிறார்.
இப்படம் வரும் 14-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் இப்படம் பற்றி மீனாட்சி சவுத்ரி பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறுகையில்,
‘இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நான் நடித்திருப்பது ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும். இந்தப் படத்தில் ஆக்சன் மற்றும் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளேன். எனது சினிமா கெரியரில் இதை முதல்முறையாக செய்திருக்கிறேன். அது “சங்கராந்திகி வஸ்துன்னம் ” படத்தின் மூலம் நிகழ்ந்திருக்கிறது’ என்றார்.