கலையரசன் நடித்த 'டிரெண்டிங்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

கலையரசன் நடித்த 'டிரெண்டிங்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது


மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரீட்சையமானவர் நடிகர் கலையரசன். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான வாழை திரைப்படம் பெருமளவு வெற்றிப்பெற்றது. தற்பொழுது மெட்ராஸ்காரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஷேன் நிகாம் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ம் தேதி வெளியாகவுள்ளது.

இதைத்தொடர்ந்து கலையரசன் அடுத்ததாக கதாநாயகனாக டிரெண்டிங் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் சிவராஜ் இயக்கியுள்ளார். இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் நாயகியாக பிரியாலயா நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சந்தானம் நடித்த இங்க நான் தான் கிங்கு மற்றும் குட் நைட் திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் பிரேம் குமார் மற்றும் பெசன்ட் ரவி நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Ram Filmfactory (@ramfilmfactoryproduction)




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *