தான் படித்த பள்ளிக்காக நடிகர் தனுஷ் சொந்த செலவில் செய்துள்ள விஷயம்…

நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தனுஷ்.
கடைசியாக தனது பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் பல நலத்திட்ட உதவிகளை செய்து அந்நிகழ்ச்சியில் பேசிய விஷயம் மிகவும் வைரலாகி வந்தது.
அவர் பேசியதை வைத்து தனுஷின் அடுத்த டார்க்கெட் அரசியல் என்றெல்லாம் பேசப்பட்டது. அதனை தொடர்ந்து தனுஷ் தனது மகன்களுடன் திருவண்ணாமலை சென்று சாமி தரிசனம் செய்திருந்தார், அந்த புகைப்படங்களும் வெளியாகின.
திறப்பு விழா
இந்த நிலையில் நடிகர் தனுஷ் செய்துள்ள ஒரு விஷயம் குறித்த நல்ல விஷயம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் அமைந்துள்ளது தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பற்றி. இந்தப் பள்ளியில் தான் தனுஷ் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
இங்கு சாதாரண மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்த கட்டடம் ஒன்றை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக 3 தளங்கள் கொண்ட கான்கிரீட் கட்டடம் ஒன்றை நடிகர் தனுஷ் தனது சொந்த செலவில் கட்டிக் கொடுத்துள்ளார், அதற்கு தனுஷ் பிளாக் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நடைபெற அதில் தனுஷ் அவருடன் இணைந்து படித்த ஒளிப்பதிவாளர் குமரன், தனுஷின் சகோதரிகள் கார்த்திகா தேவி, விமலகீதா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






