விஜய் படத்தின் FDFS காட்சி டிக்கெட் வாங்க சொன்ன அஜித்! ஆச்சர்யம் ஆன தயாரிப்பாளர்

நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவரும் போட்டியாளர்களாக எல்லோரும் கருதினாலும், அவர்கள் நட்புடன் தான் இருந்து வருகின்றனர்.
சமீபத்தில் அஜித்தின் தாயார் மறைவுக்கு விஜய் நேரில் சென்று ஆறுதல் கூறி இருந்தார். அந்த வீடியோவும் வைரல் ஆகி இருந்தது.
டிக்கெட் வாங்க சொன்ன அஜித்
அஜித் சொன்ன ஒரு விஷயத்தை பற்றி ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் தற்போது பேட்டியில் கூறி இருக்கிறார்.
“நான் விஜய் சார் ரசிகன் என அஜித் சாருக்கு நன்றாகவே தெரியும். சர்க்கார் படத்தின் ரிலீசுக்கு முந்தைய நாள் அஜித் சார் என்னிடம் பேசினார்.
“உங்க தலைவன் படம் வருது, முதல் ஆளாய் போய் உட்காரனும். அப்படித்தானே?”
“எனக்கும் அவர் நண்பர் தான்.”
“நானும் வரேன்.. எனக்கும் சேர்த்து டிக்கெட் போடு என கூறினார் அஜித்” என ராகுல் தெரிவித்துள்ளார்.






