தமிழ் சினிமா நடிகர்களின் முதல் ரூ. 50 கோடி வசூல் செய்த திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

வசூல்
ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் வசூல் விவரங்களை தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். தயாரிப்பு நிறுவனங்களும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் வசூல் விவரங்கள் குறித்து அறிவிப்பை வெளியிடுவதை தற்போது வழக்கமாக்கிவிட்டனர்.
அதுவும் முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை, சமூக வலைத்தளங்களில் அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் வசூல் பற்றி பேசி சண்டையே போடுவார்கள். அப்படி வசூல் என்பது படத்தின் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.
முதல் ரூ. 50 கோடி வசூல்
இந்த நிலையில், பாக்ஸ் ஆபிஸில் ரூ. 50 கோடி, ரூ. 100 கோடி, ரூ. 500 கோடி என்பது மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
அப்படி தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களின் திரை வாழ்க்கையில் ரூ. 50 கோடி வசூல் செய்த முதல் திரைப்படம் என்ன என்பதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.
-
ரஜினிகாந்த் – படையப்பா: ரூ. 60 கோடி -
கமல் ஹாசன் – இந்தியன்: ரூ. 50 கோடி -
விஜய் – வேலாயுதம்: ரூ. 60+ கோடி - அஜித் – மங்காத்தா: ரூ. 86 கோடி
- சூர்யா – அயன்: ரூ. 60+ கோடி
- விக்ரம் – அந்நியன்: ரூ. 60+ கோடி
- தனுஷ் – வேலையில்லா பட்டதாரி: ரூ. 50+ கோடி
- சிம்பு, விஜய் சேதுபதி – செக்க சிவந்த வானம்: ரூ. 90+ கோடி
- சிவகார்த்திகேயன் – ரஜினி முருகன்: ரூ. 60 கோடி






