251 வைரம்.. ஜான்வி கபூர் அணிந்த வாட்ச் விலை இத்தனை கோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் முதல் மனைவி மகள் அன்ஷுலா கபூர் திருமண கொண்டாட்டம் பாலிவுட்டில் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.
அதற்கு காரணம் பல முக்கிய சினிமா நட்சத்திரங்கள் திருமணத்தில் கலந்துகொண்டது தான். ஜான்வி கபூர் பட்டு சேலையில் மிகவும் அழகாக வந்திருந்த புகைப்படங்களும் வைரல் ஆகி வருகிறது.
வாட்ச் விலை
மேலும் திருமணத்தில் ஜான்வி கபூர் பிங்க் உடையில் வந்தபோது கட்டி இருந்த வாட்ச் விலை தான் எல்லோருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.
அதில் 251 வைர கற்கள், தங்க dial பிளேட் ஆகியவை இருக்கிறதாம்.மேலும் அந்த வாட்ச் விலை சுமார் 2.5 கோடி ரூபாய் என்கிற தகவல் வெளியாகி எல்லோருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.






