பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி

பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி

பராசக்தி

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் பராசக்தி. இப்படத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, அதர்வா, ரவி மோகன் ஆகியோர் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான இப்படம் தோல்வியை சந்தித்தது.

பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி | Sudha Kongara Moves Hc Against Parasakthi Makers

வழக்கு 

பராசக்தி திரைப்படம் வெளியாகி கிட்டதட்ட 5 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், தற்போது இயக்குநர் சுதா கொங்கரா தனக்கு சம்பளம் பாக்கி என கூறி தயாரிப்பு நிறுவனம் Dawn Pictures மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி | Sudha Kongara Moves Hc Against Parasakthi Makers

தன்னுடைய சம்பள பாக்கி ரூ. 8.39 கோடியை வழக்கும் வரை, Dawn Pictures நிறுவனத்தில் இருந்து வெளிவரவிருக்கும் இதயம் முரளி திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என இயக்குநர் சுதா கொங்கரா வழக்கு தொடர்ந்துள்ளார்.

வெளிவருமா இதயம் முரளி

Dawn Pictures தயாரிப்பில் உருவாகியுள்ள வரும் ஜூலை 10-ஆம் தேதி இதயம் முரளி திரைப்படம் வெளிவரவிருந்த நிலையில், சுதா கொங்கரா இப்படியொரு வழக்கு தொடர்ந்துள்ளார். இதயம் முரளி திரைப்படத்தை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி | Sudha Kongara Moves Hc Against Parasakthi Makers

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *