சர்தார் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த நடிகர் கார்த்தி

சர்தார் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த நடிகர் கார்த்தி

சர்தார்

இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி 2021-ஆம் ஆண்டு வெளிவந்து ஹிட்டான திரைப்படம் சர்தார். இப்படத்தில் தந்தை – மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். குறிப்பாக தந்தை கதாபாத்திரத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

சர்தார் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த நடிகர் கார்த்தி | Sardar 2 Movie Release Date Official Announcement

சர்தார் 2

சர்தார் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு கூடியது. அதன்படி, சர்தார் 2 அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார்.

சர்தார் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த நடிகர் கார்த்தி | Sardar 2 Movie Release Date Official Announcement

மேலும் ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று, இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், எப்போது வெளியாகும் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

சர்தார் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த நடிகர் கார்த்தி | Sardar 2 Movie Release Date Official Announcement

ரிலீஸ் தேதி

அப்படி எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி சர்தார் 2 வெளியாகும் என நடிகர் கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *