வெளிநாட்டில் திருமண நாளை கொண்டாடிய நயன்தாரா.. ரொமான்டிக் புகைப்படங்கள் வைரல்

நடிகை நயன்தாரா தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட தவறுவதில்லை. ஷூட்டிங் வெளியூருக்கு போனாலும் அவர் தனது மகன்களை உடன் அழைத்து செல்கிறார்.
நயன்தாரா தனது மகன்கள் உடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே சென்னையில் ஷூட்டிங் நடத்த வேண்டும் என தயாரிப்பாளர்களிடம் சொல்வதாகவும் முன்பு செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியில் திருமண நாள்
இந்நிலையில் இன்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் திருமண நாளை இத்தாலியில் கொண்டாடி இருக்கின்றனர்.
இத்தாலியில் புகழ்பெற்ற ரியால்டோ பாலம் முன்பு நின்று அவர்கள் ரொமான்டிக் ஆக போட்டோ எடுத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த போட்டோக்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.






