நடிகை பானுப்பிரியாவை அதற்காக அழைத்தோம், ஆனால்? … குஷ்பு ஓபன் டாக்

நடிகை பானுப்பிரியாவை அதற்காக அழைத்தோம், ஆனால்? … குஷ்பு ஓபன் டாக்

பானுப்பிரியா

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய ஒவ்வொரு நடிகைகளுக்கும் ஒரு ஸ்பெஷல் விஷயம் உள்ளது.

அப்படி தனது அழகான கண்களால் ரசிகர்களை மயக்கி நடனத்தால் வியக்க வைத்தவர் தான் நடிகை பானுப்பிரியா.
தமிழ் மட்டும் இல்லை தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.

தனது கிளாசிக்கல் நடனத்தால் ரசிகர்களை வியக்க வைத்தவர் இப்போது சினிமா பக்கமே காணவில்லை.

நடிகை பானுப்பிரியாவை அதற்காக அழைத்தோம், ஆனால்? ... குஷ்பு ஓபன் டாக் | Acrtress Kushboo About Banupriya


குஷ்பு பேட்டி


80களின் பிரபலங்கள் ஒவ்வொரு வருடமும் Reunion என்ற பெயரில் சந்திக்கிறார்கள்.

அதேபோல் எல்லா வருடத்திற்கும் ஒரு தீம் வைத்து அதற்கு ஏற்றார் போல் உடைகள் அணிந்து எஞ்சாய் செய்வார்கள்.
இந்த ரீயூனியனில் ஒருமுறை கூட நடிகை பானுப்பிரியா கலந்துகொண்டது இல்லை, காரணம் என்ன என்று இதுவரை தெரியாமல் இருந்தது.

நடிகை பானுப்பிரியாவை அதற்காக அழைத்தோம், ஆனால்? ... குஷ்பு ஓபன் டாக் | Acrtress Kushboo About Banupriya

இந்த நிலையில் நடிகை குஷ்பு சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை பானுப்பிரியா குறித்து பேசியுள்ளார். அதில் அவர், நாங்கள் 2, 3 முறை பானுப்பிரியாவை அழைத்தோம், ஆனால் அவர் வரவில்லை.

அவர் யாருடனும் அவ்வளவு எளிதாக பழகமாட்டார், படப்பிடிப்பில் கூட அவர் தனியாகத்தான் இருப்பார். சினிமாவில் பானுப்பிரியாவிற்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை, எப்போதும் எல்லோரிடமிருந்தும் விலகியே இருப்பார் என கூறியுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *