விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தாய் கிழவி திரைப்படம்.. நேரம், தேதி எப்போது தெரியுமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தாய் கிழவி திரைப்படம்.. நேரம், தேதி எப்போது தெரியுமா?

தாய் கிழவி

2026ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிலிருந்து வெளிவந்து மாபெரும் வெற்றி திரைப்படமாக மாறியுள்ளது தாய் கிழவி.

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ராதிகா சரத்குமார் கதையின் நாயகியாக நடித்திருந்தார். சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்க, பாலசரவணன், சிங்கம்புலி, அருள்தாஸ், முனீஸ்காந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பு

கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது. திரையரங்கை தொடர்ந்து ஓடிடியிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், தற்போது தாய் கிழவி திரைப்படம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. ஆம், வருகிற ஜூன் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று 3.30 மணிக்கு தாய் கிழவி திரைப்படம் ஒளிபரப்பாகிறது. அதற்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *