நடிகர் அஜித்தின் தாயார் மோகினி மணியின் உடல் தகனம் செய்யப்பட்டது..

அஜித்தின் தாயார்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். இவர் தாயார் மோகினிமணி (வயது 89) நேற்று காலை வயது மூப்பு காரணமாக காலமானார்.
இவரது மறைவு அஜித் குடும்பத்திற்கு பெரும் துயரத்தை தந்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சமாக்கத்தில் உள்ள அஜித்குமார் இல்லத்தில் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டிருந்தது.
அஜித்தின் தாயாருக்கு இறுதி அஞ்சலி செலுத்த சினிமா பிரபலங்களும், அரசியல்வாதிகளும் வருகை தந்தனர். இதில், தமிழ்நாட்டின் முதல்வரும், அஜித்தின் நண்பருமான விஜய் அவர்கள் நேற்றிரவு நேரில் சென்று தனது அஞ்சலியை செலுத்தினார்.
இறுதி சடங்குகள்
இந்த நிலையில், இன்று காலை பெசன்ட் நகர் மின் மயானத்தில் குடும்பத்தினர் முன்னிலையில் அஜித்தின் தாயார் மோகினிமணிக்கு இறுதி சடங்குகள் நடைபெற்று அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.
மேலும், இறுதி ஊர்வலம் நடந்த நிலையில், அதற்கு பாதுகாப்பளித்த போலீசாருக்கு அஜித் தனது நன்றியை சொன்னது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.






