சமந்தாவை நான் ஏமாற்றினேனா? ட்ரோல்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நாக சைதன்யா

சமந்தாவை நான் ஏமாற்றினேனா? ட்ரோல்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நாக சைதன்யா


நடிகர் நாக சைதன்யா மற்றும. சமந்தா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு நான்கு வருடங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்தனர். அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக 2021ல் விவாகரத்தை அறிவித்தனர்.

தற்போது நாக சைதன்யா நடிகை சோபிதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். சமந்தா உடன் வாழ்ந்தபோதே நாக சைதன்யா அவருக்கு துரோகம் செய்ததாக அவர் மீது நீண்ட காலமாக விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. அதை எதிர்த்து தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார் நாக சைதன்யா.

சமந்தாவை நான் ஏமாற்றினேனா? ட்ரோல்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நாக சைதன்யா | Naga Chaitanya Files Personality Rights Suit

வழக்கு

தனது முன்னாள் மனைவி மற்றும் தனது பெயரை குறிப்பிட்டு பொய்யான தகவலை பரப்பி வரும், youtubeல் இருக்கும் ட்ரோல் வீடியோக்களை நீக்கவேண்டும் என நாக சைதன்யா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

மேலும் தனது பெயரை பயன்படுத்தி சில ஆபாச இணையதளங்களில் வீடியோக்கள் வருவதாகவும், அவற்றையும் நீக்க வேண்டும் என நாக சைதன்யா கேட்டிருக்கிறார்.

இதை personality rights பாதுகாக்க மட்டுமே வழக்காக பதிவு செய்வதாகவும் கூறி இருக்கிறார். நேற்று விசாரணைக்கு இந்த வழக்கு வந்த நிலையில், youtube மற்றும் google இதில் 8வது எதிர்மனு தாரர்களாக சேர்க்கப்பட்டனர். இது பற்றி விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அவர்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட மற்ற தளங்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

அடுத்த விசாரணை செப்டம்பர் 30ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *