நயன்தாராவுக்கு சல்மான் கான் படத்தில் இப்படி ஒரு Roleஆ? ரிஸ்க் எடுக்கும் லேடி சூப்பர்ஸ்டார்

நயன்தாராவுக்கு சல்மான் கான் படத்தில் இப்படி ஒரு Roleஆ? ரிஸ்க் எடுக்கும் லேடி சூப்பர்ஸ்டார்


லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நயன்தாரா. மற்ற பெரிய ஹீரோ படங்களில் நடிப்பது ஒருபக்கம் இருந்தாலும், சோலோவாகவும் அவர் படங்கள் நடித்து வருகிறார்.

ஆனால் அப்படி நடித்து சமீப காலமாக பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் அவர் திணறி வருவதும் குறிப்பிடத்தக்கது. அதனால் அவரது அடுத்த படங்களான மூக்குத்தி அம்மன் 2, ராக்காயி போன்ற படங்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

நயன்தாராவுக்கு சல்மான் கான் படத்தில் இப்படி ஒரு Roleஆ? ரிஸ்க் எடுக்கும் லேடி சூப்பர்ஸ்டார் | Nayanthara Action Packed Role In Salman Khan Svc63

சல்மான் கான் படம்

மேலும் ஹிந்தியில் சல்மான் கான் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. வாரிசு, தோழா போன்ற படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி தான் இந்த SVC63 படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் நயன்தாராவின் ரோல் எப்படி இருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. சல்மான் கானுக்கு இணையாக நயன்தாராவின் ரோல் ஆக்ஷ்ன் காட்சிகள் அதிகம் இருக்கும் வகையில் தான் இருக்குமாம்.

நயன்தாரா தான் ஸ்டண்ட் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறாராம்.
  


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *