வீட்டிற்கு தெரிந்த தர்ஷினி விஷயம், ஈஸ்வரி கேள்விக்கு ஜனனி கொடுத்த ஷாக்கிங் பதில்… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்

எதிர்நீச்சல் தொடர்கிறது
கடந்த சில வாரங்களுக்கு முன் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகை பார்வதி, தொடரின் கதை வரும் மாதங்களில் மொத்தமாக மாறப்போகிறது, நீங்கள் எதிர்ப்பார்க்காத கதை என்று கூறியிருந்தார்.
அதற்கு ஏற்றார் போல் புதிய வில்லன் என்ட்ரி வர கதையில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
குணசேகரனை விட கொடூர வில்லனாக ராணா என்ட்ரி கொடுத்துள்ளார். குணசேகரனை போல Silent Killerஆக எல்லா வில்லத்தனத்தையும் செய்து வருகிறார்.
இப்போது எல்லோரின் கேள்வியும், குணசேகரன் வழக்கில் என்ன ஆகும் என்பது தான். ஈஸ்வரி சுத்தமாக கணவர் பக்கம் சென்றுவிட்டார், இப்போது அடுத்த ஆதாரமாக ஜனனி தர்ஷினியை தான் நம்பியுள்ளார். ஆனால் அவரோ தற்போது கடத்தப்பட்டுள்ளார்.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், ஜனனி-சக்தி, தர்ஷினி காணாமல் போன விஷயத்தை வீட்டில் கூறுகிறார்கள். இதனால் ஈஸ்வரி மிகவும் கோபப்படுகிறார், தர்ஷினி உடனே இங்கு வந்தாக வேண்டும் இல்லையென்றால் நீங்கள் வேற ஈஸ்வரியை பார்ப்பீர்கள் என்கிறார்.
சக்தி கொஞ்சம் நிலைமையை புரிந்துகொள்ளுங்கள் என்று கூற குணசேகரன் என் பொண்ணை கொண்டு வந்து இப்போது நிப்பாட்டு என கோபப்படுகிறார்.
உடனே ஜனனி, நான் கண்டிப்பாக தர்ஷினி அழைத்துக்கொண்டு வருவேன், இது என் குழந்தை மீது சத்தியம் என கூற ஈஸ்வரி ஷாக் ஆகிறார்.






