விஜய் டிவியில் புதிதாக வரும் ‘தாய் மாமன்’ சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ

விஜய் டிவி
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன.
அதே போல் புதிதாக ஒளிபரப்பாக தொடங்கிய அழகே அழகு போன்ற சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தாய் மாமன்
இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் அடுத்ததாக ‘தாய் மாமன் தாய்க்கு நிகரானவன்’ என்கிற புதிய சீரியல் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீரியலில் ரஞ்சித், ராஜ்கபூர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏற்கனவே இந்த சீரியலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ வெளிவந்த நிலையில், தற்போது எப்போதிலிருந்து எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது என்பது குறித்து புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
இதில், தாய் மாமன் சீரியல் வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி முதல் மாலை 7 மணிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் என அறிவித்துள்ளனர்.






