2 பேருக்குள் தமிழ் சினிமா முடிகிறது.. லவ்வர் பட புகழ் மணிகண்டன் வருத்தம்

2 பேருக்குள் தமிழ் சினிமா முடிகிறது.. லவ்வர் பட புகழ் மணிகண்டன் வருத்தம்


மணிகண்டன்

தமிழ் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் மணிகண்டன். இந்த தலைமுறை ரசிகர்களை கவரும் வண்ணம் இவருடைய நடிப்பு வலம் வருகிறது.



விக்ரம் வேதா, காலா ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்த இவர், ஜெய் பீம் படத்தின் மூலம் சிறந்த நடிகர் என அனைவராலும் பாராட்டப்பட்டார்.

2 பேருக்குள் தமிழ் சினிமா முடிகிறது.. லவ்வர் பட புகழ் மணிகண்டன் வருத்தம் | Manikandan About Tamil Cinema

மேலும் குட் நைட் படம் இவருக்கு மாபெரும் வரவேற்பை மக்களிடையே ஏற்படுத்தியது. இந்த ஆண்டு வெளிவந்த ‘லவ்வர்’ படமும் இளைஞர்களை கவர்ந்தது.

 வருத்தம்  

இந்நிலையில், பேட்டி ஒன்றில் சினிமா குறித்து சில விஷயங்களை மணிகண்டன் பேசியுள்ளார். அதில், “தமிழ் சினிமாவை 2 பேருக்குள் அடக்கி வைத்திருக்கிறோம்.

இதுவே ஹாலிவுட், டோலிவுட் என மற்ற மொழி சினிமாவில் 10 முதல் 15 ஹீரோக்கள் வரை உள்ளனர். இதில், 140 – ம் மேற்பட்ட கதைகளை நான் 4 மாதங்களில் கேட்டுள்ளேன்.

2 பேருக்குள் தமிழ் சினிமா முடிகிறது.. லவ்வர் பட புகழ் மணிகண்டன் வருத்தம் | Manikandan About Tamil Cinema

இது போன்று எத்தனையோ பேர் இருப்பார்கள். ஆனால், ஏன் தமிழ் சினிமா வெறும் 4, 5 ஹீரோக்களை வைத்து தமிழ் சினிமாவை முடித்து விடுகிறார்கள். சினிமாவை நம்பி பல நடிகர்கள் இருக்கிறார்கள். இன்னும் வருகிறார்கள், அவர்களுக்கும் சினிமா வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *