அறிவுக்கரசிக்கு தரமான பதிலடி கொடுத்த ஈஸ்வரி, ஷாக்கில் கதிர்… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
ரசிகர்கள் அடுத்து என்ன அடுத்து என்ன என கேட்கும் அளவிற்கு விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது.
ஈஸ்வரிக்கு பழைய நியாபகங்கள் மீண்டும் வருமா, குணசேகரன் ஜனனி போட்ட வழக்கில் சிக்கவாரா இல்லையா, ராணா குணசேகரன் ஈஸ்வரி தாக்கிய வீடியோவை கொடுப்பாரா இல்லை என்ன செய்யப்போகிறார், அவரைப் பற்றி குணசேகரன் குடும்பத்திற்கு எப்போது தெரிய வரும் என பல கேள்விகளுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
குணசேகரன் தன் மீது போடப்பட்ட வழக்கில் இருந்து தப்பிக்க எல்லோவற்றையும் மறந்த ஈஸ்வரியை பயன்படுத்தி வருகிறார்.
புரொமோ
நேற்றைய எபிசோடில், ஈஸ்வரிக்கு தர்ஷன்-பார்கவி திருமணம் பற்றிய விஷயம் தெரிய வருகிறது. அதைக்கேட்டு ஈஸ்வரி ஷாக் ஆக அவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என அனைவரும் பயந்துவிட்டார்கள்.
பின் ஈஸ்வரி, எனது கணவர் என்னிடம் பேசும்போது இனி உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய் என்று சொன்னார். இப்போது நான் சொல்கிறேன் முதலில் இந்த பெண்ணை (அறிவுக்கரசி) வீட்டைவிட்டு வெளியே அனுப்புங்கள் என கதிர்-ஞானத்திடம் கூறுகிறார்.
ஆனால் அறிவுக்கரசி என்னை வெளியே அனுப்பிவிடுவீர்களா, உண்மை எல்லாம் சொன்னால் என்ன நடக்கும் தெரியுமா என குணசேகரனை மிரட்டுகிறார்.






