10 கோடி நஷ்டஈடு கேட்டு ஏ.ஆர்.முருகதாஸ் மீது பிரபல தயாரிப்பாளர் புகார்!

10 கோடி நஷ்டஈடு கேட்டு ஏ.ஆர்.முருகதாஸ் மீது பிரபல தயாரிப்பாளர் புகார்!


இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த வருடம் இரண்டு படங்கள் வந்தது. ஹிந்தியில் சல்மான் கானை வைத்து அவர் இயக்கிய சிக்கந்தர் படம் பெரிய தோல்வி ஆனது.

சல்மான் கான் நேரத்திற்கு ஷூட்டிங் வரமாட்டார், மொழி பிரச்சனை எனக்கு இருந்தது.. அதனால் தான் படம் தோல்வி அடைந்தது என முருகதாஸ் கூறி இருந்தார்.

அதே நேரத்தில் முருகதாஸ் இயக்கிய மதராஸி படமும் தோல்வி அடைந்தது. ‘சிவகார்த்திகேயன் சீக்கிரமே ஷூட்டிங் வந்திருப்பாரே.. அந்த படம் ஏன் தோல்வி அடைந்தது’ என சல்மான் கான் முருகதாஸை தாக்கி பேசி இருந்தார்.

10 கோடி நஷ்டஈடு கேட்டு ஏ.ஆர்.முருகதாஸ் மீது பிரபல தயாரிப்பாளர் புகார்! | Madharaasi Producer Complaint On Murugadoss

மதராஸி தயாரிப்பாளர் புகார்

இந்நிலையில் மதராஸி படத்தின் தயாரிப்பாளர் தற்போது இயக்குனர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்.

“முதலில் 115 கோடி ரூபாயில் படத்தை எடுத்து முடிக்க முருகதாஸ் பட்ஜெட்டை கூறினார். ஆனால் படத்தை முடிக்கும்போது 170 கோடி ரூபாய் ஆக அது உயர்ந்தது. அவர் சரியாக திட்டமிடாததும், அதே நேரத்தில் சிக்கந்தர் படத்தை இயக்கி கொண்டு இருந்ததும் அதற்கு காரணம். அதனால் அவர் 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கொடுக்க வேண்டும்” என கேட்டிருக்கிறார் தயாரிப்பாளர்.

இந்த பிரச்சனை பற்றி நடந்த பேச்சுவார்த்தையில் இறுதியில் ஒரு முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. ரமணா 2 படத்தின் கதையை எழுதி தயாரிப்பாளருக்கு இலவசமாக தர வேண்டும் என ஒப்பந்தம் எட்டப்பட்டு இருக்கிறதாம்.  

10 கோடி நஷ்டஈடு கேட்டு ஏ.ஆர்.முருகதாஸ் மீது பிரபல தயாரிப்பாளர் புகார்! | Madharaasi Producer Complaint On Murugadoss


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *