பிரபல நடிகர் மரணம்.. ஹோட்டல் ரூமில் சடலமாக மீட்பு

பிரபல நடிகர் மரணம்.. ஹோட்டல் ரூமில் சடலமாக மீட்பு


திலீப் சங்கர்

மலையாள திரையுலகை சேர்ந்த நடிகர் திலீப் சங்கரின் (வயது 54) மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத்தில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் திலீப் சங்கர்.

இவர் மலையாளத்தில் வெளிவந்த பஞ்சாக்னி, சுந்தரி போன்ற பிரபலமான சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் சில திரைப்படங்களிலும் திலீப் சங்கர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடிகர் மரணம்.. ஹோட்டல் ரூமில் சடலமாக மீட்பு | Malayalam Actor Dileep Shankar Died In Hotel Room

பஞ்சாக்னி சீரியலின் படப்பிடிப்பிற்காக நடிகர் திலீப் சங்கர், எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்றுள்ளார். படப்பிடிப்பு இரண்டு நாள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கேயே ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியுள்ளார்.

இதன்பின் இரண்டு நாட்களாக அவரை படப்பிடிப்பு குழு தொடர்ப்பு கொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகப்பட்டு போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகர் மரணம்.. ஹோட்டல் ரூமில் சடலமாக மீட்பு | Malayalam Actor Dileep Shankar Died In Hotel Room

ஹோட்டல் ரூமில் சடலமாக மீட்பு

அங்கு வந்த போலீஸ் ஹோட்டல் ரூம் கதவை உடைத்து பார்த்ததில், திலீப் சங்கர் சடலமாக இருந்தது தெரியவந்துள்ளது. இவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதே பரிசோதனையின்படி,மரணத்திற்கான காரணம், உள் இரத்தப்போக்கு, கீழே விழுந்தபோது தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக இருக்கலாம்.

பிரபல நடிகர் மரணம்.. ஹோட்டல் ரூமில் சடலமாக மீட்பு | Malayalam Actor Dileep Shankar Died In Hotel Room

மேலும் நடிகர் திலீப் சங்கர் கலீரல் தொடர்பான பிரச்சனையால் உடல்நல பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *