Shruti Haasan has said that her faith in God has helped her through life’s challenges|’கடவுள் மீது நான் வைத்த நம்பிக்கைதான் வாழ்க்கையில் என்னை…’

Shruti Haasan has said that her faith in God has helped her through life’s challenges|’கடவுள் மீது நான் வைத்த நம்பிக்கைதான் வாழ்க்கையில் என்னை…’


சென்னை,

கமல்ஹாசன் மகளான சுருதிஹாசன் தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் தற்போது சொந்த வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.

அந்தவகையில், சுருதிஹாசன் தனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் என்று தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

‘கடவுள் சக்தியை நம்புகிறேன். கடவுள் மீது நான் வைத்த நம்பிக்கைத்தான் வாழ்க்கையில் என்னை வலிமையாக்கியது. எனது வீடு ஒரு நாத்திக இல்லமாக இருந்தது. எனது தந்தை நாத்திகவாதி. இதனால் வளரும்போது கடவுள் என்ற கருத்து எங்களுக்கு இருந்தது இல்லை.

ஒரு கட்டத்தில் கடவுள் நம்பிக்கையை எனக்குள் நானே கண்டுபிடித்தேன். நான் முதலில் கோவிலுக்கு சென்றது மிகவும் சிறந்த அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை இன்றுவரை விரும்புகிறேன்’ என்றார்.



admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *