தமிழ் இயக்குனர் செய்த செயல், தவறான செய்தி வந்தது.. கதறி கதறி அழுத நடிகை லாவண்யா திரிபாதி!

தமிழ் இயக்குனர் செய்த செயல், தவறான செய்தி வந்தது.. கதறி கதறி அழுத நடிகை லாவண்யா திரிபாதி!

தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் லாவண்யா திரிபாதி. அவர் தமிழிலும் சில படங்கள் நடித்து இருக்கிறார். பிரம்மன், மாயவன் போன்ற படங்களில் நடித்திருக்கும் அவர் சமீபத்தில் அதர்வா ஜோடியாக தணல் என்ற படத்தில் நடித்திருந்தார்.

தெலுங்கு நடிகர் வருண் தேஜை காதலித்து சில வருடங்கள் முன்பு திருமணம் செய்து கொண்டார் அவர். சிரஞ்சீவி குடும்பத்து மருமகள் ஆன பிறகு அவர் படங்களில் நடிப்பதையும் குறைத்துக்கொண்டார்.

கடந்த வருடம் லாவண்யா – வருண் தேஜ் ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இயக்குனர் செய்த செயல், தவறான செய்தி வந்தது.. கதறி கதறி அழுத நடிகை லாவண்யா திரிபாதி! | Lavanya Tripathi Cried News After Exit Tamil Film

கதறி கதறி அழுதேன்

இந்நிலையில் லாவண்யா திரிபாதி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசும்போது, “நான் தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருந்தேன். ஆனால் சில விஷயங்கள் எனக்கு சரியாக படாததால் படத்தில் இருந்து விலகிவிட்டேன். எனக்கு uncomfortable ஆக இருந்தது.”

  “ஆனால் அந்த இயக்குனர் என் மீது வழக்கு தொடர்ந்தார். என்னை பற்றி தவறாக நியூஸ் பேப்பர்களில் செய்திகள் வந்தது. அதை எல்லாம் பார்த்து வீட்டில் கதறி கதறி அழுதேன். எனக்கு குடும்ப பின்னணி அப்போது எதுவும் இல்லை. (இப்போது தான் சிரஞ்சீவி குடும்ப மருமகள் ஆச்சே).”

“அழுவது நல்லது தான். அதன் பின் நானே என்னை தேற்றிக்கொண்டேன்” என அவர் கூறி இருந்தார். 

யார் அந்த இயக்குனர்?

லாவண்யா திரிபாதி குறிப்பிட்ட படம் “100% காதல்” தான். ஜீ.வி.பிரகாஷ் ஜோடியாக முதலில் லாவண்யா நடிக்க இருந்தார். அவர் கடைசி நேரத்தில் விலகியதால் இயக்கும் சந்திரமௌலி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் புகார் அளித்தார்.

அதன் பிறகு அந்த படத்தில் ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படமும் பிளாப் தான் ஆனது. 

தமிழ் இயக்குனர் செய்த செயல், தவறான செய்தி வந்தது.. கதறி கதறி அழுத நடிகை லாவண்யா திரிபாதி! | Lavanya Tripathi Cried News After Exit Tamil Film

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *