When and where to watch Payal Kapadia’s film|’கிராண்ட் பிரிக்ஸ்’ விருது வென்ற “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை,
பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான படம் “ஆல் வி இமேஜின் அஸ் லைட்”. இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கடம், ஹிருது ஹாரூன், அஸீஸ் நெடுமங்காட் மற்றும் டிண்டுமால் ஜோசப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிட்டு இரண்டாவது உயரிய விருதான ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்றது. மேலும், கோல்டன் குளோப் விருதுக்கும் “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 82 வது கோல்டன் குளோப் விருதுகள் விழா அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 3-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் இந்தியா முழுவதும் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.