பேபி ஜான் திரை விமர்சனம்

பேபி ஜான் திரை விமர்சனம்


வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள பேபி ஜான் இந்தி திரைப்படத்தின் விமர்சனம் குறித்து காண்போம்.

கதைக்களம்



கேரளாவில் பேக்கரி வைத்திருக்கும் ஜானுக்கும், பெண்களை கடத்தும் கும்பலுக்கும் இடையே மோதல் உருவாகிறது.


அப்போது ஜானின் பின்னணி தெரிய வர, அவரின் கடந்த கால வாழ்க்கையில் என்ன நடந்தது? கடத்தல் கும்பலிடம் இருந்து பெண்களை அவர் மீட்டாரா என்பதே ‘பேபி ஜான்’ படத்தின் கதை.

பேபி ஜான் திரை விமர்சனம் | Baby John Movie Review

படம் பற்றிய அலசல்


தமிழில் வெளியான ‘தெறி’ திரைப்படத்தின் ரீமேக்தான் இந்த பேபி ஜான். அட்லீ இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

ஆனால் கதாபாத்திரங்களிலும், காட்சிகளிலும் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


தமிழில் ‘கீ’ படத்தை இயக்கிய காலிஸ் திரைக்கதையில் நன்கு கவனம் செலுத்தியுள்ளார்.

வருண் தவான் பேக்கரி வைத்திருக்கும் ஜான் டி சில்வா மற்றும் DCP சத்யா வர்மாவாக ஆக்ஷ்ன் அதகளம் செய்திருக்கிறார்.



ஆனால், ஒப்பீட்டளவில் நடிகர் விஜய்யை விட குறைவாகதான் பல காட்சிகளில் நடித்துள்ளார்.

எனினும் தன்னால் முடிந்தவரை கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார்.



காணாமல் போன மாணவியை வருண் தவான் கண்டுபிடிப்பதும், அவரது நிலைக்கு காரணமான நபரை கொலை செய்யும் விதமும் இயக்குநரின் மிரட்டல்.

வருண் தவானின் மகளாக வரும் ஸாரா துறுதுறு நடிப்பால் கவர்கிறார்.

வாமிகா கேபியை ஆசிரியையாக காட்டி பின் அவருக்கு என வைத்திருக்கும் ட்விஸ்ட் காட்சி அருமை.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஸ்கோர் செய்திருந்தாலும், நைன் மடக்கா பாடலில் தனது நடன அசைவுகளால் ஈர்க்கிறார்.



அதேபோல் வருண் தவானுடன் பயணிக்கும் காமெடி நடிகர் ராஜ்பால் யாதவ் எமோஷனலாக பேசும் காட்சியிலும், பஞ்ச் டயலாக் பேசியும் தெறிக்கவிட்டிருக்கிறார்.



ஜாக்கி ஷெராப் வழக்கமான வில்லனாக மிரட்டும்போது, தமிழ் நடிகர்கள் ஜாபர் சாதிக், காளி வெங்கட் ஆகியோரின் அறிமுகம் நமக்கு அட நம்மாளுங்க என தோன்ற வைக்கிறது.


அவர்களும் தங்களது கதாபாத்திரத்தை சரியாக செய்துள்ளனர். தமனின் பின்னணி இசை பல இடங்களில் இரைச்சலாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட காட்சியில் வரும் பாடலில் உருக வைக்கிறார்.



இறுதியாக சல்மான் கானின் கேமியோவும், ஆக்ஷ்ன் சீனும் தியேட்டரை ஆர்ப்பரிக்க செய்கிறது.



க்ளாப்ஸ்



நடிப்பு



திரைக்கதை



எமோஷனல் காட்சிகள்



சண்டைக்காட்சிகள்



மைனஸ்



ரீமேக் படம் என்பதால் அடுத்து என்ன நடக்கும் என தெரிந்துவிடுகிறது



மொத்தத்தில் தெறி படத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது பேபி ஜான் சற்று குறைவுதான் என்றாலும் தொய்வில்லாத திரைக்கதையால் ரசிக்க வைக்கிறது.



ரேட்டிங் 3/5  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *