பராசக்தி மொத்த வசூலை அறிவித்த தயாரிப்பாளர்! எத்தனை கோடி பாருங்க

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி இருந்த பராசக்தி படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்து இருந்த்து. இரண்டே நாளில் 50 கோடி வசூலை தாண்டிவிட்டதாக தயாரிப்பாளர் அப்போது அறிவித்து இருந்தார்.
மேலும் இயக்குனர் சுதா கொங்கரா நடிகர் விஜய்யின் ரசிகர்கள் பராசக்தி படத்தை பற்றி விமர்சித்து ரௌடியிசம் செய்கிறார்கள் என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இப்போது வரை வந்திருக்கும் வசூல்
இந்நிலையில் 11 நாட்களை கடந்த நிலையில் வந்திருக்கும் மொத்த வசூலை தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். ரூ.100 கோடி என்ற மைல்கல்லை தற்போது பராசக்தி தொட்டிருப்பதாக அறிவித்துள்ளனர்.
போஸ்டர் உடன் வந்திருக்கும் அறிவிப்பு இதோ.






