தனுஷின் 54வது படத்தின் First லுக் வெளிவந்தது.. டைட்டில் என்ன தெரியுமா?

D54
இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் D54. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.
மேலும் கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், சுராஜ், கருணாஸ் என பலரும் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
First லுக்
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்ற நிலையில், First லுக் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று பொங்கல் ஸ்பெஷலாக படத்தின் First லுக் போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. D54 திரைப்படத்திற்கு ‘கர’ என தலைப்பு வைத்துள்ளனர்.
இதோ அந்த போஸ்டர் பாருங்க:






