விஜய் ரசிகர்களின் ரவுடியிசம்.. பராசக்தி பட இயக்குநர் சுதா கொங்கரா பேட்டி

விஜய் ரசிகர்களின் ரவுடியிசம்.. பராசக்தி பட இயக்குநர் சுதா கொங்கரா பேட்டி


பராசக்தி 

ஜனநாயகன் மற்றும் பராசக்தி ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளிவரவிருந்தன. விஜய்யின் கடைசி படத்தோடு சிவகார்த்திகேயன் படம் வருவதை விஜய் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சமூக வலைத்தளங்களில் பெரும் சண்டை வந்தது.

இதன்பின், பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், “விஜய் சாரிடம் பேசினேன் சிவகார்த்திகேயன் படம் தாராளமாக வரட்டும்” என கூறியதாக நடிகர் சிவகார்த்திகேயன் பேசியிருந்தார்.

விஜய் ரசிகர்களின் ரவுடியிசம்.. பராசக்தி பட இயக்குநர் சுதா கொங்கரா பேட்டி | Sudha Kongara Talk About Vijay Fans Attack

இதன்பின் ஜனவரி 9ஆம் தேதி வெளிவரவிருக்கும் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால் படம் வெளிவரவில்லை. தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.


ஜனவரி 10ஆம் தேதி வெளிவந்த பராசக்தி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இதனை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் பராசக்தி படத்தை சமூக வலைதளங்களில் தொடர்ந்து ட்ரோல் செய்து வந்தார்கள். இதைப்பற்றி பராசக்தி படத்தின் Creative தயாரிப்பாளர் கூட பேசியிருந்தார்.

சுதா கொங்கரா பேட்டி


இந்த நிலையில், படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா பராசக்தி படத்திற்கு ஏற்படும் தாக்குதல் குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். “தெரியாத ஐடிகளுக்கு பின்னால் ஒளிந்துகொண்டு அவதூறு பரப்புகிறார்கள். இதனை எந்த நடிகரின் படம் வெளிவரவில்லையோ, அவருடைய ரசிகர்கள் தான் செய்கிறார்கள். அந்த ரசிகர்கள் செய்யும் ரவுடியிசம் மற்றும் குண்டர்தனத்தையும் எதிர்கொள்ள வேண்டியதாக உள்ளது” என கூறியுள்ளார்.

விஜய் ரசிகர்களின் ரவுடியிசம்.. பராசக்தி பட இயக்குநர் சுதா கொங்கரா பேட்டி | Sudha Kongara Talk About Vijay Fans Attack

சுதா கொங்கரா இந்த பேச்சையும் தற்போது விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
  


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *