பிக்பாஸ் 9 நிகழ்ச்சிக்குள் நடந்தது இதுதான், திடீரென கானா வினோத் வெளியிட்ட வீடியோ

பிக்பாஸ் 9
எதிர்ப்பாராததை எதிர்பாருங்கள் அதுதான் பிக்பாஸ் என விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக பல சீசன்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
இப்போது 9வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, 20 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த ஷோ பொங்கல் அன்று முடிகிறது. விக்ரம், சபரி, திவ்யா, அரோரா ஆகியோரில் ஒருவர் தான் டைட்டிலை ஜெயிக்கப்போகிறார், ஆனால் யார் என்பது உறுதியாக தெரியவில்லை.
தற்போது பழைய போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸிற்குள் என்ட்ரி கொடுக்க வீடே மிகவும் கலகலப்பாக உள்ளது.
அதேசமயம் பிக்பாஸும் போட்டியாளர்களுக்கு கலகலப்பான டாஸ்க் கொடுத்த வண்ணம் உள்ளார்.
வினோத்
வீட்டில் இறுதி போட்டியாளர்களாக உள்ளவர்களில் யார் ஜெயிப்பார் என தெரியவில்லை, ஆனால் மக்கள் வெற்றியாளராக வினோத்தை பார்த்தார்கள்.
அவர் திடீரென யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் ரூ. 18 லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டார். பிக்பாஸில் இருந்து வந்தவருக்கு அவரது வீட்டினர் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கானா வினோத், பிக்பாஸில் நடந்தது குறித்தும், பணப்பெட்டி எடுத்து பற்றியும் நிறைய விஷயங்களை வீடியோவில் பகிர்ந்துள்ளார்.






