நடிகர் விஜய்யின் ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ், கூடவே வந்த சோகமான செய்தி…

நடிகர் விஜய்
2026, இந்த வருட பொங்கல் ஸ்பெஷலாக நடிகர் விஜய்யின் கடைசிப்படமான ஜனநாயகன் ரிலீஸ் ஆக இருந்தது.
இந்த பொங்கலை தளபதி பொங்கலாக கொண்டாட ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களும் ஆவலாக இருந்தார்கள். ஆனால் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.
இந்த தணிக்கை சான்றிதழ் பெறுவதில் தயாரிப்பு குழுவும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
என்ன செய்தி
ஜனநாயகன் பொங்கல் இல்லை என வருத்தப்பட்ட ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ் தான் விஜய்யின் செம ஹிட் படமான தெறி ரீ-ரிலீஸ்.
சரி புது படம் தான் இல்லை, இந்த ஹிட் படத்தை கொண்டாடலாம் என ரசிகர்கள் சந்தோஷப்பட்டனர். ஆனால் இப்போது என்ன விஷயம் என்றால் தெறி ரீ-ரிலீஸும் தள்ளிப்போனதாம். பொங்கலுக்கு புதுப்படங்களின் வரவால் தெறி ரீ-ரிலீஸ் தள்ளிப்போவதாக தயாரிப்பாளர் தாணு கூறியுள்ளார்.
குட் நியூஸ் என்னவென்றால் ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும் ஜனநாயகன் படத்தின் சென்சார் விவகாரத்தில் மேல்முறையீட்டு வழக்கின் மீது ஜனவரி 15ம் தேதி விசாரணை நடக்க வாய்ப்பு இருப்பதாக நல்ல செய்தி வந்துள்ளது.






