ஜன நாயகன் பட விவகாரம்: “இது அப்பட்டமான அநீதி”- தணிக்கைத்துறையை சாடிய மாரி செல்வராஜ் | ‘Jananayagan’ film controversy: “This is blatant injustice”

ஜன நாயகன் பட விவகாரம்: “இது அப்பட்டமான அநீதி”- தணிக்கைத்துறையை சாடிய மாரி செல்வராஜ் | ‘Jananayagan’ film controversy: “This is blatant injustice”


சென்னை,

‘ஜனநாயகன்’ மற்றும் ‘பராசக்தி’ திரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், ‘பராசக்தி’ படத்தில் சில இடங்களில் வசனங்களை மியூட் செய்தும், சில காட்சிகளை நீக்கியும் மத்திய திரைப்படத் தணிக்கைத்துறை U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து, ‘பராசக்தி’ திரைப்படம் திட்டமிட்டபடி இன்று திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

ஆனால், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், அந்த வழக்கு வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த சூழலில், வழக்கு தள்ளிப்போனதால் அவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாத ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு ஆதரவாக இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜனநாயகன் திரைப்படத்தின் மீது நம் தணிக்கைத்துறை நிகழ்த்தியிருப்பது அப்பட்டமான அநீதி தான். ஒரு படைப்பாளி என்ற முறையில் இந்த அநீதியை எதிர்ப்பதன் மூலம், நம் ஜனநாயகத்தின் மீதும், நம் படைப்புச் சுதந்திரத்தின் மீதும் வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய பெருங்குரலெழுப்புவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *