Today Rasi Palan in Tamil – 10.01.2026 | இன்றைய ராசிபலன்

Today Rasi Palan in Tamil – 10.01.2026 | இன்றைய ராசிபலன்



இன்றைய பஞ்சாங்கம்:-

ஜனவரி 10

கிழமை : சனிக் கிழமை

தமிழ் வருடம் : விசுவாவசு

தமிழ் மாதம் : மார்கழி

நாள் : 26

ஆங்கில தேதி : 10

மாதம் : ஜனவரி

வருடம் : 2026

நட்சத்திரம் : இன்று மாலை 07-37 வரை அஸ்தம் பின்பு சித்திரை.

திதி : இன்று பிற்பகல் 12-33 வரை சப்தமி பின்பு அஷ்டமி

யோகம் : மரண யோகம்

நல்ல நேரம் காலை : 07-30 to 08-00

நல்ல நேரம் மாலை : 4-30 to 5-30

ராகு காலம் காலை : 9-00 to 10-30

எமகண்டம் மாலை : 1-30 to 3-00

குளிகை காலை : 6-00 to 7-30

கௌரி நல்ல நேரம் காலை : 10-30 to 11-30

கௌரி நல்ல நேரம் மாலை : 9-30 to 10-30

சூலம் : கிழக்கு

சந்திராஷ்டமம் : சதயம், பூரட்டாதி

இன்றைய ராசிபலன்:-

மேஷம்

ஆன்மீக சிந்தனை மேலோங்கும். உத்யோகஸ்தர்கள் தங்கள் அலுவலகத்தின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பிள்ளைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் மிகும். கலைஞர்களுக்கு முன் பணம் கிடைக்கும். பட விநியோகஸ்தர்கள் கிடைப்பர். விரைவில் தங்கள் படம் வெளியாகும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

ரிஷபம்

வீடு வாங்க கடன் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தங்கள் பெண்ணுக்கு நல்ல வரண் அமையும். உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகும். பிள்ளைகளது ஆசிரியர் புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள். காதலர்கள் தங்கள் கடமையை உணர்வர். தாங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி தரும்.

அதிர்ஷ்ட நிறம் : வான்நீலம்

மிதுனம்

நிர்வாகத் திறமையால் பதவி உயரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். வெளிநாட்டுப் பயணம் பயன் தரும். அரசாங்க வகைகளில் அனுகூலம் உண்டாகும். எதிரிகளின் தொல்லைகள் அகலும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குவியும். மாணவர்கள் பிடித்த துறையை தேர்ந்தெடுப்பர்.

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கடகம்

மார்கெட்டிங் பிரிவினர் புதிய ஆர்டர்கள் பெற சற்று கூடுதல் அலைச்சல் தேவை. சமூக ஆர்வலர்கள் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. வீட்டில் வேலையாட்களின் கோபத்தினை காட்டாமல் தட்டிக் கொடுப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

சிம்மம்

வெளிநாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். பொதுபணிகளில் உள்ளவர்கள் ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம். மாணவர்கள் படிப்பிற்காக இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவர்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கன்னி

பழைய வாகனத்தை விற்கும் எண்ணம் தோன்றும். எதிர்வீட்டுக்காரர்களுடன் இருந்த பகைமை நீங்கும். கோயில் விழாக்களில் மரியாதை கிடைக்கும். வெளியூர் செய்தி மகிழ்ச்சியைத் தரும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கழுத்து வலி வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

துலாம்

கணவன்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். பொறுமை மிக அவசியம். பிரபலமானவர்களால் நன்மை உண்டு. உங்களை சார்ந்து இருப்பவர்களின் நிலையினை உணர்ந்து உதவுவீர்கள். உத்யோகஸ்தர்கள் வேலையை விரைவில் முடிப்பர். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர்.

அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்

விருச்சிகம்

தம்பதிகளிடையே அன்பு பலப்படும். உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் பாராட்டுவர். வேலை தேடுபவர்களுக்கு புது உத்யோக வாய்ப்பு வரும். மளிகைக் கடை மற்றும் சில்லரை வியாபாரம் லாபம் தரும். வியாபாரிகளின் தங்கள் தொழிலுக்கு ஏற்ப வங்கிக் கடன் கிட்டும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

தனுசு

வியாபாரம் பலமடங்காக லாபத்தை கொடுக்கும். திடீர் வெளியூர் பயணம் உண்டு. பிரபலங்களின் எதிர்பாராத சந்திப்பு நிகழும். அவர்களால் நன்மைகள் உண்டு. உறவினர்களை பார்த்து மகிழ்வீரகள். பயணங்கள் அதிகரிக்கும். உடல் நலம் சிறக்கும். வேலையாட்களிடம் கோபம் வேண்டாம்.

அதிர்ஷட நிறம் : சாம்பல்

மகரம்

உத்யோகம் சாதகமாக செல்லும். இன்று நண்பர்களுடன் மார்கெட் மற்றும் மாலுக்கு சென்று வருதல், திரைப்படம் பார்த்தல் போன்றவைகளில் நேரத்தை செலவழிப்பீர்கள். புதிய திட்டங்களை மனதிற்குள் அசைபோடுவீர்கள். தம்பதிகளிடையே மனஸ்தாபம் விலகும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கும்பம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

மீனம்

விடுமுறை நாட்களில் புதிய கலைகளை கற்று கொள்வீர்கள். வருமானம் உயரும். தம்பதியர்களிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தேவையான பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். வசதி, வாய்ப்புகள் பெருகும். தோல்வி பயம் நீங்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *