விபத்தில் சிக்கிய எஸ்ஜே சூர்யா.. கம்பியில் மோதி காயம்

இயக்குனர், நடிகர் என பல திறமைகள் கொண்டவர் எஸ்.ஜே சூர்யா. அவர் தமிழ் சினிமாவில் சமீப காலமாக வில்லன் ரோல்களில் மிரட்டி வருகிறார்.
நீண்ட காலத்திற்கு பிறகு SJ சூர்யா தற்போது மீண்டும் படம் இயக்க தொடங்கி இருக்கிறார். அவர் கில்லர் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
விபத்து
கில்லர் படத்தின் ஷூட்டிங்கில் நடத்த விபத்தில் எஸ்ஜே சூர்யா சிக்கி காயம் அடைந்து இருக்கிறார். சண்டை காட்சி எடுத்தபோது இரும்பு கம்பியில் மோதி காலில் காயம் ஏற்பட்டு இருக்கிறது.
மருத்துமனையில் அட்மிட் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது ஓய்வில் இருக்கிறாராம் அவர். இரண்டு வாரங்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்.






