உன்னை நினைத்து படத்தில் சூர்யாவுக்கு முன் நடித்துள்ள விஜய்… பல வருடங்களுக்கு பிறகு வீடியோவை வெளியிட்ட இயக்குனர்

உன்னை நினைத்து படத்தில் சூர்யாவுக்கு முன் நடித்துள்ள விஜய்… பல வருடங்களுக்கு பிறகு வீடியோவை வெளியிட்ட இயக்குனர்

நடிகர் விஜய்

தமிழ் சினிமா கொண்டாடும் நம்பிக்கை நட்சத்திரம், பாக்ஸ் ஆபிஸ் கிங், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ரசிக்கும் ஒரு நாயகன் விஜய். 

வரும் ஜனவரி 9ம் தேதி விஜய் நடித்துள்ள அவரது கடைசிப்படமான ஜனநாயகன் திரைப்படம் வெளியாக உள்ளது, படத்திற்கான புரொமோஷன் வேலைகள் எல்லாம் பிஸியாக நடக்கிறது.

ஆனால் கடைசி நேரத்தில் படத்தின் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது, நீதிமன்றம் நாடினால் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் கடைசி படத்திற்கு கடைசி நேரத்தில் பிரச்சனை தருகிறார்களே என கொஞ்சம் வருத்தத்தில் உள்ளனர்.

உன்னை நினைத்து படத்தில் சூர்யாவுக்கு முன் நடித்துள்ள விஜய்... பல வருடங்களுக்கு பிறகு வீடியோவை வெளியிட்ட இயக்குனர் | Vikraman Released Vijay Unseen Movie Video

அன்ஸீன் வீடியோ

விஜய் சினிமாவில் இருந்து விலகுவது என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக உள்ளது, மிகவும் வருத்தத்தை கொடுத்துள்ளது.

ஜனநாயகன் ரிலீஸ் ஆகவுள்ள இந்த நேரத்தில் பிரபல இயக்குனர் விக்ரமன் அவரது இயக்கத்தில் விஜய் நடித்த படத்தின் காட்சிகளை வெளியிட்டுள்ளார்.

உன்னை நினைத்து படத்தில் சூர்யாவுக்கு முன் நடித்துள்ள விஜய்... பல வருடங்களுக்கு பிறகு வீடியோவை வெளியிட்ட இயக்குனர் | Vikraman Released Vijay Unseen Movie Video

விக்ரமன், சூர்யா-லைலா-சினேகா நடிக்க உன்னை நினைத்து என்ற படத்தை இயக்கினார். இப்படத்தில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் விஜய் தான் நடித்துள்ளார்.

என்னை தாலாட்டும் என்ற பாடலில் விஜய்-லைலா நடித்த பழைய வீடியோவை இப்போது வெளியிட்டுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *