தொடர்ச்சியாக 7 தோல்விகள்…ஆனாலும் குறையாத பட வாய்ப்பு – யார் அந்த நடிகை தெரியுமா?|Seven consecutive failures… yet her film opportunities haven’t diminished

சென்னை,
தற்போது கதாநாயகியாக வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். சிலருக்கு அந்த வாய்ப்புகள் கிடைத்தாலும் பெரிய வெற்றியைப் பெற முடிவதில்லை. பல கதாநாயகிகள் ஒன்று அல்லது இரண்டு படங்களுக்குப் பிறகு மறைந்து விடுகிறார்கள். வேறு சிலருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைத்தாலும் வெற்றிகளைப் பெற முடிவதில்லை. இப்போது நாம் பேசும் கதாநாயகியும் அவர்களில் ஒருவர்தான்.
அவர் பலருக்குப் பிடித்த நட்சத்திரம். தனது நடிப்பாலும் கவர்ச்சியாலும் பலரைக் கவர்ந்துள்ளார். ஆனால் வெற்றிகள் அவருக்கு அந்த அளவுக்கு இல்லை. அவர் யார் தெரியுமா?
அவர் வேறு யாறும் இல்லை நடிகை பூஜா ஹெக்டேதான். ஜீவா நடித்த ’முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பூஜா ஹெக்டே, தொடர்ச்சியாக தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தார். குறுகிய காலத்தில் நட்சத்திர அந்தஸ்தை பெற்ற பூஜா, பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். விஜய், சூர்யா, மகேஷ் பாபு, பிரபாஸ், என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆகியோருடன் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் இவர் சமீப காலமாக தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறார்.
பூஜா கடைசியாக நடித்த 7 படங்களும் தோல்வியடைந்தன. ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா, சர்க்கஸ், கிசி கா பாய் கிசி கி ஜான், தேவா மற்றும் ரெட்ரோ போன்ற பெரிய படங்கள் அவருக்கு கைக்கொடுக்கவில்லை.
இருப்பினும், தற்போது பூஜா கைகளில் மூன்று படங்கள் உள்ளன. தமிழில், விஜய்யின் ஜன நாயகன், தெலுங்கில் துல்கர் சல்மானுடன் ’டிகியூ41’ மற்றும் இந்தியில் ஹை ஜவானியுடன் ‘இஷ்க் ஹோனா ஹை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், ஜனநாயகன் வருகிற 9-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படம் அவரது தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளிவைக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.






