இந்திய கால்பந்து வீரர்கள் வெளியிட்ட வேதனை வீடியோ – நடிகர் ஜான் ஆபிரகாம் காட்டம்|Indian football players release a distressing video

இந்திய கால்பந்து வீரர்கள் வெளியிட்ட வேதனை வீடியோ – நடிகர் ஜான் ஆபிரகாம் காட்டம்|Indian football players release a distressing video


சென்னை,

ஐ.எஸ்.எல் (ISL) கால்பந்து தொடர் நடைபெறாமல் இருப்பதால், இந்திய கால்பந்தை காப்பாற்ற வேண்டும் என வீரர்கள் இணைந்து வீடியோ வெளியிட்டிருந்தனர். அதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நடிகர் ஜான் ஆபிரகாம் தனது காட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அதில், “இது நமக்கு அவமானம். இந்த நிலைக்கு நாம் வந்துவிட்டோம்” என வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு செப்டம்பரிலேயே தொடங்க வேண்டிய ஐ.எஸ்.எல்(ISL) கால்பந்து தொடர், போதிய நிதி இல்லாததால் இன்னும் நடத்தப்படவில்லை.

அடுத்த ஆண்டு தொடங்கிவிட்டதால் இந்திய கால்பந்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குர்ப்ரீத் சிங் சந்து, சுனில் சேத்ரி உள்ளிட்ட இந்திய கால்பந்து வீரர்கள் வீடியோ வெளியிட்டனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *