பாடலுக்கு கிடைத்த வரவேற்பு…நடிகை ஆஷிகா நெகிழ்ச்சி

பாடலுக்கு கிடைத்த வரவேற்பு…நடிகை ஆஷிகா நெகிழ்ச்சி


சென்னை,

தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு வலுவான இடத்தை உருவாக்கி வரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், தொடர்ச்சியாக தனது நடிப்பு மற்றும் கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது அவர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ’பாரத மகாசாயுலகு விக்ஞாப்தி’ (பிஎம்டபிள்யூ) படத்தில் நடித்துள்ளார். கிஷோர் திருமலா இயக்கும் இப்படம் வருகிற 13-ம் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில், இப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியான “வாம்மோ வாயோ” என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், சமூக ஊடகங்களில், ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களிடமிருந்து கிடைத்த அமோக வரவேற்பிற்கு நடிகை ஆஷிகா தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “எனது முதல் மாஸ் தெலுங்கு பாடல் இது. உடல்நலம் சரியில்லாதபோதும், எந்த தயக்கமுமின்றி ஆடினேன். நீங்கள் கொடுத்த அற்புதமான அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி,” என்று தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

A post shared by Ashika Ranganath (@ashika_rangnath)

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *