பிரபல பாடகர் பென்னி தயாலுக்கு குழந்தை பிறந்தது…

பென்னி தயாள்
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ தான் சூப்பர் சிங்கர்.
இந்த ஷோவில் கலந்துகொண்ட பல போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது திறமையை காட்டி இப்போது சினிமாவில் பின்னணி பாடகர்களாக கலக்கி வருகிறார்கள்.
பென்னி தயாள்
சினிமாவில் நிறைய ஹிட் பாடல்கள் கொடுத்தாலும் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் பென்னி தயாள். பல சீசன்களில் நடுவராக இருந்து மக்களின் மனதை வென்றவர்.
இவர் கடந்த 2016ம் ஆண்டு நியூயார்க்கில் வசித்து வந்த கேத்ரின் பிலிப் என்கிற மாடல் அழகியை திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்து பல வருடங்கள் கழித்து பென்னி மற்றும் கேத்ரின் கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்தார்கள்.
இந்த நிலையில் இந்த அழகிய ஜோடிக்கு கடந்த டிசம்பர் 27ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளதாம். இந்த தகவலை பென்னி தயாள் குழந்தை புகைப்படத்துடன் வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.






