புத்தாண்டைப் பொன்னாண்டு செய்வோம்”- கவிஞர் வைரமுத்து வாழ்த்து | “Let’s make the New Year a golden year

புத்தாண்டைப் பொன்னாண்டு செய்வோம்”- கவிஞர் வைரமுத்து வாழ்த்து | “Let’s make the New Year a golden year



உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கோலாகலமாக தொடங்கி உள்ளது. ஒருவொருக்கொருவரும் வாழ்த்துகளை பறிமாறிகொண்டு வருகின்றனர். இந்தநிலையில் ஆங்கில புத்தாண்டையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ஆன்மிக தலைவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், கவிஞர் வைரமுத்து ஆங்கில புத்தாண்டுக்கு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

“பூச்செண்டுதானே

கொண்டுவந்தாய்… வா!

புன்னகைதானே

வாங்கிவந்தாய்… வா!

365 பாத்திரங்களிலும்

எங்கள் கனவுகளின்

நனவுகளை நிரப்பு

பூமியே -கடலே

பூகம்பமே – எரிமலையே

எல்லைக்குள் நில்லுங்களென

ஆணையிடு

தொட்டில் குழந்தைக்கு

நீளும் ஆயுளே

கட்டில் கிழவனுக்கும் என்று

கருணை செய்

போர் என்னும்

மிருகமிச்சம் ஒழியட்டும்

வெடிகுண்டுகளை வெளியேற்றி

பீரங்கித் துவாரங்களில்

புறாக்களின் முட்டைகளை

அடைகாக்க ஆவனசெய்

பசி – விபசாரம்

கொலை கொள்ளை என்னும்

மனிதர்களின்

ஆதிஅடையாளங்களை அழித்துவிடு

2026-இல்

இலங்கும் உயிர்களையெல்லாம்

2027-இல்

சேதாரமில்லாமல் சேர்த்துவிடு

உழைப்போம்; உயர்வோம்

வாழ்வோம்; வாழ்விப்போம்”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *