இந்த வாரத்தோடு முடிவுக்கு வரும் விஜய் டிவியின் முக்கிய சீரியல்! கிளைமாக்ஸ் இதுதான்

விஜய் டிவி தற்போதுதமிழ்நாட்டில் முக்கிய சேனல்களில் ஒன்று. டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி உடன் போட்டி போட்டு வருகிறது.
இருப்பினும் சிறகடிக்க ஆசை சீரியல் மட்டுமே அவ்வப்போது டாப் 5 டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் இடம்பிடித்து வருகிறது.
முடிக்கப்படும் சீரியல்
இந்நிலையில் வரும் சனிக்கிழமையோடு விஜய் டிவியின் பூங்காற்று திரும்புமா சீரியல் முடிக்கப்பட இருக்கிறது. அதை ப்ரோமோ வெளியிட்டு விஜய் டிவி அறிவித்து இருக்கிறது. யாருக்கு யாருடன் திருமணம் என்பது தான் கிளைமாக்ஸ்.
இவ்வளவு சீக்கிரம் ஏன் முடிக்கிறீர்கள் என ரசிகர்கள் கமெண்டில் கேட்டு வருகின்றனர்.
விரைவில் விஜய் டிவியில் அழகே அழகு என்ற புது சீரியல் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.






