Actor Sivakarthikeyan congratulates Nallakannu on his birthday

Actor Sivakarthikeyan congratulates Nallakannu on his birthday


சென்னை,

தமிழ்நாட்டின் முதுபெரும் பொதுவுடைமைச் சிந்தனையாளரும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவருமான தோழர் இரா. நல்லக்கண்ணுவின் 100-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. தமிழ் மக்களுக்கு நல்லக்கண்ணு ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும்விதமாக, தமிழ்நாடு அரசு 2022-ம் ஆண்டு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கிச் சிறப்பித்தது.

அவருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், த.வெ.க தலைவர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

‘இன்று நூறாவது பிறந்தநாள் கொண்டாடும் விடுதலைப்போராட்ட வீரர், ஈடுஇணையற்ற மக்கள் தலைவர் பெருமதிப்பிற்குரிய திரு.நல்லகண்ணு ஐயா அவர்களை நேரில் சந்தித்து எனது அன்பையும் வணக்கங்களையும் தெரிவித்ததில் பெரும் மகிழ்ச்சி’

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *