கேரளாவில் விஜய்யின் ஜனநாயகன் பட ரிலீஸில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்… சோகமான விஷயம்

கேரளாவில் விஜய்யின் ஜனநாயகன் பட ரிலீஸில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்… சோகமான விஷயம்


ஜனநாயகன்

தமிழ் சினிமாவே மிகவும் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஒரு படம் ஜனநாயகன். பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம்வரும் விஜய் தனது திரைப்பயணத்தில் நடித்திருக்கும் கடைசிப்படம். 

எனவே ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் படத்தை திரையரங்கில் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளனர். வரும் ஜனவரி 9ம் தேதி படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டத்தின் உச்சமாக கடந்த டிசம்பர் 27ம் தேதி மலேசியாவில் நடந்தது.

கேரளாவில் விஜய்யின் ஜனநாயகன் பட ரிலீஸில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்... சோகமான விஷயம் | Update About Jananayagan Kerala Release

அங்கு சந்தோஷமாக நிகழ்ச்சியை முடித்து சென்னை வந்த விஜய் கூட்டத்தில் சிக்கி தவறி விழுந்து காரில் ஏறி வீட்டிற்கு செல்லும் போது கார் விபத்திலும் சிக்கியுள்ளது. ஆனால் யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை.

ஏமாற்றம்

இசை வெளியீட்டு விழா கொண்டாட்ட வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் இப்போதும் வைரலாக்கி வருகிறார்கள். ரசிகர்கள் பலரும் அதிகாலை ஷோ பார்க்க ஆவலாக இருக்க கேரளாவில் ரிலீஸ் குறித்து ஒரு விஷயம் வெளியாகியுள்ளது.

அதாவது ஜனவரி 9ம் தேதி அதிகாலை 4 மணிக்கு விஜய்யின் ஜனநாயகன் படத்தை திரையிட கேரளாவில் அனுமதி கிடைக்கவில்லையாம்.

காலை 6 மணிக்கு தான் முதல் ஷோவே திரையிட அனுமதி கிடைத்துள்ளதாம். இது கேரளா விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமான செய்தியாக அமைந்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *