மலேசியாவில் குவியும் ரசிகர்கள்…5 கிமீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் – வீடியோ வைரல்

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதுவதால் மலேசியா சாலையில் 5 கிமீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய்யின் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவில் நடக்கிறது. கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடக்கிறது. அதில் கலந்து கொள்வதற்காக விஜய், பூஜா ஹெக்டே, அனிருத், இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட பலர் நேற்று மலேசியாவுக்கு சென்றனர்.
இம்முறை இசை வெளியீட்டு விழாவாக நடத்தாமல் தளபதி கச்சேரி என்கிற பெயரில் கான்செர்ட்டாக நடத்தப்பட உள்ளது. தற்போது புக்கட் ஜலீல் ஸ்டேடியம் அருகே ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். சுமார் 80,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.






